கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
வங்க கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியத்திற்கு பிறகு, விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.
















