திருவாரூர் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்..
கழக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, நலம் தரும் வகையில் கொண்டாட துணை முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி திருவாரூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வைப்பூர், அலிவலம் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு நலம் தரும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைப்பூர் பகுதியில் கழகக் கொடியேற்றி கேக் வெட்டி பொதுமக்களுக்கு புத்தாடைகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திருவாரூர் ஒன்றிய திமுக செயலாளர் புலிவலம் தேவா வழங்கினார். தொடர்ந்து வைப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு, புத்தகங்கள் ஆகியவற்றை திமுக ஒன்றிய செயலாளர் வழங்கினார். இதேபோல திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட அலிவலம் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா தலைமையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் புத்தாடைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைப்பூர் ராஜா உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

















