திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து மின்கல ரயில் வண்டியை இயக்கி மாணவர்களை மகிழ்வித்தார்,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுபணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு அறிவியல் பூங்கா மற்றும் முதல்வர் படிப்பக பூங்கா திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அமைச்சர் சா.மு.நாசர் அங்கு இருந்த மின்கல ரயில் வண்டியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு தானே மின்கல ரயில் வண்டியை ஓட்டிச் சென்றார் பூங்காவை சுற்றி காண்பித்து மகிழ்வித்தார், மேலும் அங்கு போட்டி தேர்வுகளுக்கு பயில வந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் உச்சாகப்படித்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுரேஷ், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயகுமார், பொதுப்பணித்துறை பொறியாளர் தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

















