- லாக்கப்களில் நடக்கும் வன்முறையை நாடு பொறுத்துக் கொள்ளாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
- உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- இந்தியா – கனடா இடையிலான உறவு படிப்படியாக வளர்ந்து வருகிறது என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.
- புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை 2026 அட்டவணையை, (நவம்பர் 25) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) வெளியிட்டது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
- ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாட்டினரை சார்ந்திருக்கும் நிலையை, இந்தியா தவிர்க்க வேண்டும், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
- வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் போட்டி போட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருகிறோம், என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
- பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலைவணங்காது என்பதை உலக நாடுகள் பார்த்தன, என பிரதமர் மோடி கூறினார்.
- முதல்வர் மாற்றம் குறித்து பொது வெளியில் பேச விரும்பவில்லை. இந்த விவகாரம், எங்களில் ஒரு சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம், என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறி உள்ளார்.
- பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கானைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான், உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.
















