வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கண்டிப்பாக லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
முறையாக பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் வீட்டில் மட்டுமே வளர்க்க வேண்டும்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாகர்கோவிலில் பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று கற்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை வழங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் தாரகை கத்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஐந்து மாதத்தில் 1256 முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 561 முகாம்கள் இதுவரை நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது.
561 முகாம்களில் 8 லட்சத்தி 82950 பேர் பயனடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் மட்டும் 15 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் இதுவரைக்கும் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. 26 ஆயிரத்து 729 பேர் பயனடைந்துள்ளனர்.
ஒரு கோடியே 47 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 808 பேர் புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இன்று பயன் பெறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் மூலம் 169 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த வாரம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவத்துறையில் 12000 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறினார். மொத்தமே 20,000 பணியிடம் தான் அதில் எப்படி 12 ஆயிரம் பணியிடம் காலி என்று கூறினார் உண்மை நிலை 2648 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
விரைவில் 1100 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அடுத்த டிசம்பர் மாதத்தில் அதற்கான தேர்வு நடைபெறும்.
விரைவில் மக்கள் நல்வாழ் துறையில் பூஜ்ஜியம் நிலை காலிப்பணியிடம் உருவாக உள்ளது.
நாய் கடி குறித்து பத்திரிக்கையாளர்கள் பதட்டத்தை உருவாக்க வேண்டாம். நாய் கடிக்கு தடுப்பூசி மட்டும்தான் போட முடியும். என தெரிவித்தார்.

















