திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1971-இல் திமுக ஆட்சியின் போது கோயில் இடத்தில் ராஜகோபாலசாமி அரசு கலை , அறிவியல் கல்லூரியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். மன்னார்குடியில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. மன்னார்குடி எம்எல்ஏவும் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா முயற்சியால் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழாண்டு அரசு மகளீர் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார் . உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன். நவம்பர் மாதம் துவங்க உள்ள புதிய மகளிர் கல்லூரிக்கு செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., கணினி அறிவியல் , நுண்ணுரியல் , பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் , பிகாம் வணிகவியல், பிஏ வரலாறு ஆகிய 5 பாடப்பிரிவுகள் இடம் பெறும் எனக் கூறினார். முதல்கட்டமாக அரசு ராஜகோபால சாமி கல்லூரியில் ஓர் அறையில் புதிய மகளிர் கல்லூரி அலுவலகம் நடைபெற்றது . பொறுப்பு முதல்வர், 7 பேராசிரியர்கள் , 5அலுவலகப் பணியாளர்கள் நிய மிக்கப்பட்டனர். இந்நிலையில் மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் சோழராஜன், திங்கள்கிழமை தனது முகநூல் பதிவில், மன்னார்குடி நகராட்சி பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள விழா அரங்கம், அதன் எதிரே வணிக வளாகத்தின் முதல் தளத்தில் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிர் கல்லூரி அமைய இருப்பதை ஆய்வு செய்ததாக பதிவிட்டிருந்தார். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்திலும் வணிக நிறுவனங்கள் செயல்படும் இடத்திலும் புதிய அரசு மகளிர் கல்லூரி நடத்தக் கூடாது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. பேருந்து நிலைய வளாகத்தின் அருகே உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அரசுக் கல்லூரி தற்காலிகமாக தொடங்குவது உறுதியாகி அதற்கான ஒப்பந்தப் பணிகள் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. காலம் கடத்தாமல் பேருந்து நிலையத்திற்குள் புதிதாக தொடங்கப்படும் அரசு மகளிர் கல்லூரிக்கு புதிய சுட்டடம் கட்டும் வரை எந்த பிரச்னையும் எழாத வகையில் தற்காலிகமாக இயக்கிட மாற்று இடத்தினை உடனடியாக தேர்வு செய்து கல்லூரி தொடங்கிட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கருத்தாக உள்ளது. அதிருப்தியில் பெற்றோர்கள்,மாணவிகள் உள்ளனர் .

















