சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள அதன் ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. அதன்படி
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரல் மழை பெய்வதுடன், பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டன.
ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவுடன் பருவ மழை என்பது தொடங்கி இருக்கிறது
மாவட்டத்தில் மதுராந்தகம் செய்யூர் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மாமல்லபுரம் செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமுண்டத்துடன் சாரல் மழையுடன் பனிப்பொழிவு காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டன.


















