மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் நூற்றாண்டை கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் தலைமை ஆசிரியை சுசித்ரா தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கணநாதர் பொம்மை நாடக சபா குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தற்போதைய சிறுவர் சிறுமிகள் முதல் அனைவரும் செல்போனில் ரீல்ஸ் கண்டு நேரத்தை வீணடிக்கும் நிலையில் இது போன்று பொம்மலாட்ட கலைகள் மறைந்து வருவதால் அது குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை ஆர்வமுடன் மாணவ -மாணவிகள் கண்டு களித்தனர்.
இது குறித்து பொம்மலாட்ட இயக்குனர் தருமை சிவா கூறும் போது,
மறைந்து வரும் பொம்மலாட்ட நாடகத்தை வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் பள்ளிகளில் முதன்முறையாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் செல்போனில் தற்போதைய தலைமுறையினர் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி உள்ளதிலிருந்து மாறி இது போன்ற பொம்மலாட்ட நாடகத்தை கண்டும் அதனை பகிர்ந்தும் பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு உதவிட வேண்டுமெனவும், பொம்மலாட்ட கலை பயிற்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் அளிக்கப்படுவதில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்த்து கலையை கற்று வளர்த்திட வேண்டும் என
கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்


















