- ஹரியானாவின் பரிதாபாத் நகரில் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு பயங்கரவாதிகளின் சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதால், தேசியத் தலைநகர் டில்லியில் திட்டமிடப்பட்ட பெரியளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.
- பீஹார் வரலாற்றில் சிறப்பான சட்டமன்ற தேர்தல் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறினார்.
- டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
- பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
- 2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா செல்கிறார்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக டில்லி லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் நவ.12 வரை மூடப்படுகிறது.
- நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலைகள் வழக்கில் சுரேந்தர் கோலிக்கு எதிராக எஞ்சியுள்ள ஒரே வழக்கையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளதால் அவர் விரைவில் விடுதலை ஆகிறார்.
- டில்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் உயர் படிப்பு படித்த மருத்துவர்கள் என்பதன் மூலம், வெள்ளை காலர் (White Collor) பயங்கரவாதம் என்ற புதிய பாணியை பயங்கரவாத இயக்கங்கள் கையாண்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- ககன்யான் பணிக்கான ஒருங்கிணைந்த பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.


















