மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சீர்காழி வட்ட கிளை சார்பில் 5அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரைநாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் ராமபத்ரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்,
70 வயது அடைந்தவருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் குறைபாடுகளை களைந்திட வேண்டும்,
டிரேக்கிங் சிஸ்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பி ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த வட்ட இணைச் செயலாளர் வைத்தியநாதசாமி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் அவர் தமிழகத்துக்கு ஆற்றிய திட்டங்களை பாடலாக பாடி தற்போதைய நிலையையும் எடுத்துரைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

















