S.I.R வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மயிலாடுதுறையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் காங்கிரஸ் , சிபிஐ , சிபிஎம் , விசிக , மதிமுக , திக , பெரியார் திராவிட கழகம், மாவீரன் வன்னியர் சங்கம், மு மு க, தமுமுக , மக்கள் நீதி மையம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு (S.I.R ) வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்தும் , இந்திய தேர்தல் ஆணையதை கண்டித்தும் , தேர்தலை ஆணையத்தை கைப்பாவையாக செயல்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.



















