தனியார் ஆக்கிரமிப்பில் திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில் இடம்.. மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை..”
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில்.. திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 16-வது திவ்ய தேசமாக விளங்கி வருகிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக நஞ்சை புஞ்சை என ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன.
அதில் ஒரு பகுதியாக திருக்கண்ண மங்கையில் திருவாரூர் to கும்பகோணம் சாலையின் அருகே சுமார் 27 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடம் கிராம சமுதாயத்தாரால் நாற்றாங்காலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.. மேலும் கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு பயன்பாட்டிலும் இல்லாமல் பரிசாக இருந்து வருகிறது..
இந்த நிலையில்.. கடந்த 21.09.1988 ஆம் தேதியன்று ராதாபாய் (ஆவண எண் 2235), 07.03.1991 ஆம் தேதியன்று எத்திராஜ்(ஆவண எண் 468)…07.03.1991 ஆம் தேதி அன்று சம்பந்த முதலியார்
( ஆவண எண 472).. ஆகியோரால் திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில்..
திருக்கண்ணமங்கையை சார்ந்த முத்துக்குமார், வடகண்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மற்றும் சுரேஷ், சுப்ரமணியன் ஆகிய நான்கு நபர்கள் மீது பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தனி நபர்கள் கோவிலுக்கு சொந்தமான அந்த இடத்தை விற்பனை செய்ய முயன்று வருகிறார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரங்களை பெற்று அதன் அடிப்படையில்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு… இதுகுறித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும்.. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

















