மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பெருஞ்சேரி தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகள் சிவபக்தியைவிட தங்கள் தவமே சிறந்தது என்று அகந்தையடைந்த முனிவர்களின் செருக்கை அடக்க சிவபெருமான் மற்றும் விஷ்ணு இணைந்து நடத்திய திருவிளையாடலின் போது சிவனை அழிக்க பல்வேறு மிருகங்களை யாகம் மூலம் தோற்றுவித்து தாருகாவனத்து முனிவர்கள் ஏவினர். இதில் முக்கியமாக யானையை உரித்து சிவபெருமான் நடனமாடி ஆடையாக அணிந்து கொண்டார். அந்த இடம் அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு வீரட்டேஸவரருக்கு அன்னம், காய்கறிகள், பழ வகைகள், மற்றும் பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்


















