மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பாக டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், வாக்காளர்கள் தொடர்பான சரியான தரவுகளை எவ்வாறு உறுதி செய்வது, பிஎல்ஏ 2 மற்றும் பிடிஏ ஆகியோரின் குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், வகித்தார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், 3 சட்டப்பேரவை தொகுதி திமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
















