தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் தேவதாஸ் படையாண்டவர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தின் நோக்கம் வருகின்ற டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஒரு அரைப்போராட்டம் நடத்த உள்ளோம்.
வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடை வலியுறுத்தி குடும்பம் குடும்பமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை ஏற்று குறைந்தபட்சம் 10000 பேர்கள் பங்கேற்போம் என்று உறுதி அளிக்கிறோம். பெய்த கனத்த மழையின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளது. அந்த பயிர்களை கலப்புவதற்கு தமிழக அரசு 100% இனமாக டிஏபி,யூரியாவும் வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை அடி உரமும் ஒரு முட்டை யூரியாவும் வழங்க வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டுகோளாக வைக்கிறோம்.
இங்குள்ள உரக்கடைகளின் விவசாயிகள் உரம் வேண்டுமென்று சென்றால் அங்கு யூரியா வாங்க வேண்டும் என்றால் இடுபொருள் வாங்கினால் மட்டுமே உரம் கொடுப்போம் என்று கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
இது மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்நிலையைப் போக்கி அரசு நிர்ணயித்த விலையில் புற மூட்டை ஒன்று ரூ280, 265 அந்த விலைக்கு விவசாயிக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு திருவாரூர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
போட்டி : மாவட்டச் செயலாளர் வேணு.பாஸ்கர்

















