கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் அழைத்து பேசியது விசித்தரமாக சினிமாவிலும், சீரியலில் நடைபெறுவது போல் உள்ளதாகவும், சிலர் விஜய்யை தற்குறி என கூறுவதாகவும், “கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் தெரிந்துவிட்டதாக” முன்னாள் அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மஸ்தான் தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் ஏற்று கொள்ள மாட்டோம் என கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் தமிழ்நாட்டில் அவசர அவசரமாக கூடுதலாக போலி வாக்காளர்களை சேர்பதற்காக இது நடைபெறுவதாக கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும், சீரமைப்பு என்பது வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களையும், ஒரே நபரின் பெயர்கள் இரண்டு இடத்தில் இருந்தால் நீக்குங்கள் விடுபட்டவர்களை சேர்த்தால் தான் உனண்மையான சீர்திருத்தமாக இருக்கும் என தெரிவித்தார்.
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து பேசியது விசித்தரமாக சினிமாவிலும், சீரியலில் நடைபெறுவது போல் உள்ளதாகவும், சிலர் விஜய்யை தற்குறி, தருதலை தற்குறி என கூறுவதாக தெரிவித்தார். தீபாவளி, ஆயுத பூஜையை விஜய் சிறப்பாக கொண்டாடுகிறார், துக்கம் உள்ள வீட்டில் அதனை கொண்டாட மாட்டார்கள் சரக்கு இருக்கிறவர்கள் கிட்ட கருத்து சொல்லலாம் அவர்கிட்ட என்ன சரக்கு இருக்கிறது என்பது தெரிந்து போய்விட்டதாகவும், கெட்டிகாரன் புலுகு எட்டு நாள் என்பது தெரிந்து போய்விட்டது என தெரிவித்தார். அவருக்காக வக்காலத்து வாங்கிய பாஜக, அதிமுக இவர்களுடைய முழு சாயம் வெளுத்துவிட்டதாக கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற விஜய் தெரிவித்த கேள்விக்கு பதிலளித்த மஸ்தான் விஜய் குடும்பத்தை சார்ந்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் அவர்கள் எல்லாம் வெளிநாட்டில் உள்ளதாகவும் எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திமுக ஆட்சி எல்லோர் உள்ளத்திலும் இல்லத்திலும் ஸ்டாலின் உள்ளதாகவும் மக்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் மக்கள் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாத அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் எதிர்காலத்தில் டெபாசிட் வாங்க முடியாது என்பதால் திமுக அரசை விமர்சிப்பதாக மஸ்தான் தெரிவித்துள்ளார்.
















