கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு,பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி பங்கேற்பு…
ஜோதிட கலை தொடர்பான பாடத்திட்டங்களுடன் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்-ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை…
தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு கோவையை அடுத்த முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இதில், இதில்,பிரபல நடிகர் ராதாரவி மற்றும் மதுரை ஆதினம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு,நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்,மற்றும் அடையாள அட்டை வழங்கி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
விழாவில் தென்னிந்திய ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ப்ரஸன்ன மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தலைமுறைகளாக இந்த துறையில் உள்ள ஜோதிடர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் தனி நல வாரியம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்..
தொடர்ந்து பேசிய அவர் ஜோதிட கலையை விரிவுபடுத்தி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஜோதிட கலை தொடர்பான பாடத்திட்டங்களுடன் கூடிய கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாநாட்டில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஜோதிடர்கள் பலர் கலந்து கொண்டனர்..
 
			















