மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர், சீவக சிந்தாமணி, சரோஜராஜபுரம், புத்திரன்திடல், மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு திருக்கடையூரில் இருந்து செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆன நிலையில் அந்த தார் சாலை தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சாலை வழியாகத்தான் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பல்வேறு கிராமங்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர் அதுமட்டுமின்றி பல்வேறு கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் அன்றாட திருக்கடையூர் செல்வதற்கு இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர் இச்சாலையின் இருபுறங்களிலும் அதிக அளவு விளைநிலங்கள் உள்ளதால் விவசாயிகளும் இச்சாலையை நம்பி உள்ளனர் இந்நிலையில் இச்சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது இப்பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் என பலர் கலந்து கொண்டனர்.

 
			















