கரூரில் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இழந்த பெருந்துயரம் ஏற்பட்டிருந்த நிலையில், பலியானோர் குடும்பத்தோரை சென்னைக்கு வரவழைத்து நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 தேதி நடைபெற்ற தவேக மக்கள் சந்திப்பின் நிகழிச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிர் எழுந்தனர். இந்த நிகழ்வு தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது ,மக்கள் அதிக அளவில் திரண்டு வந்ததால் ஏற்பட்ட நெரிசலால் பலர் மூச்சி திணறி உயிர் இழந்தனர். இதையடுத்து பல்வேறு கட்சிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியதை தொடர்ந்து,தவேக விஜய் அறிவித்திருந்த தலா இருபது லட்சரூபாய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தவேக தலைவர் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க திமிட்டிருந்த நிலையில் தற்போது வரை அரங்கம் எங்கும் கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்திக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கு கரணம் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்திக்கும்போது மீண்டும் விபரீதம் நடக்க கூடும் என்ற காரணத்தினால் அவர்கள் 41 குடும்பத்தினரையும் ஒரே அரங்கில் வரவழைத்து விஜய் சந்திக்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
 
			















