சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்தது கவனத்தை ஈர்த்தது.
கரூர் கூட்ட நெரிசலில் பலி ஆனோர் சம்பவம், கிட்னி திருட்டு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசை கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்கவும், அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த சட்டசபை கூட்டம் வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, முதல்வர்கள்சம்பவத்திற்கும் சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் கூடுதல் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அதனை தொடர்ந்து நாளை வரை விவாதம் நடைபெறும். வரும் 17ஆம் தேதி அதற்கான பதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த மசோதாவும் இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் துயர சம்பவம், கிட்னி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கடுமையாக வாதிட உள்ளதால், இன்று நடைபெறும் கூட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.