கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுக்க மாதம் 5000 வழங்கும் நிகழ்வை ஜேப்பியார் குழும நிறுவனம் சார்பில் கரூரில் இன்று தொடங்கப்பட்டது.
ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் மரிய வில்சன் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு உண்டான பலன் சென்று சேரவேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளார். அக்குழு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று கரூர் வருகை தந்துள்ளது.ஏற்கனவே அவர் அறிவித்தபடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும்,, ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி 5,000/- ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறார்கள். அதன்படி இன்று கரூர் வேலுச்சாமி புரம் பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஜேப்பியார் கல்வி குழும குழுவினர் அங்கு கூட்ட நெரிசலில் பலியான சுகன்யாவின் வீட்டிற்க்கு வந்து அவரது குடும்பத்திற்க்கு ஆறுதல் தெரிவித்து அவரின் போட்டேர விற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ,பின்னர் மாதம் 5000, ஆயுள் காப்பீடு வழங்குவதற்க்கான ஏற்பாடுகளை செய்தனர்.