வளிமண்டல காற்று வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சாரல் மழையாக தொடங்கிய மழை கன மழையாக பெய்து வருகிறது. சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில்,புத்தூர்,தைக்கால்,திருமுல்லைவாசல்,அகனி,சட்டநாதபுரம்
, எருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. கனமழையால் சீர்காழி புறவழிச் சாலையில் சென்றவர்கள் மேம்பாலத்தின் கீழே தஞ்சம் அடைந்துள்ளனர்.
