கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை, மாநில தன்னாட்சியை அவமதிப்பாக பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மெட்ராஸ் மகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயர் சூட்ட வேண்டும் என போராட்டம் நடத்தி, உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ விசாரணை என்பதை நாம் தமிழர் கட்சி எப்போது ஏற்றுக்கொண்டதில்லை தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தேசிய இன அவமதிப்பாகவும், மாநில அரசு மற்றும் காவல்துறையை அவமதிப்பாக பார்ப்பதாகவும் கூறினார்.