பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அதிரடி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தலிபான்கள் அரசு எச்சரித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது தலிபான்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள், சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.