மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகவாய் மீது காலணியை வீசிய வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீசிய வக்கீல் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன
