விழுப்புரம் கோட்டம், விழுப்புரம் வட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 18, 2025 அன்று நடைபெற்ற கலந்தாய்வு ஆணையை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், அந்த கலந்தாய்வு ஆணையை ரத்து செய்து நாளை (அக்டோபர் 7) புதிய முறைகேடான பட்டியல் தயாரித்து மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்திருப்பது கிராம நிர்வாக அலுவலர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கோட்டாட்சியரின் நடவடிக்கையை கண்டித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, “ஆணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என கோஷமிட்டனர்.

















