விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சியில் நெல் அல்லது மஞ்சள் கலந்த அரிசியில் உயிர் எழுத்தில் முதல் எழுத்தான’ அ ‘என்ற எழுத்தை பிஞ்சு விரல்களால் எழுத சொல்லி பள்ளி வாழ்க்கையை துவங்குவது சடங்காக பின்பற்றி நிகழ்த்தப்படுகிறது.
அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் புதிதாக அங்கன்வாடி மையத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளை தனது மடியில் அமர வைத்த ஆசிரியை ஜெய்லானி, பிஞ்சுக் கரங்களைப் பிடித்து மஞ்சள் அரிசியில்” அ’ என்ற முதல் எழுத்தை எழுத வைத்தார். இந்துக்களின் நம்பிக்கையை பறைசாற்றும் வகையில் இஸ்லாமிய ஆசிரியை முழு ஈடுபாடோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எழுதறிவித்த நிகழ்வு மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது.

















