மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி சரோஜா பெயருக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 2019-ஆம் ஆண்டு வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்காக அரசால் வழங்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை ஓவர்சியர் சிதம்பரநாதன் என்பவர் பெற்று சென்றதாக கூறப்படுகிறது. மேலும் வீடு கட்டுவதற்காக கொண்டுவந்து இறக்கப்பட்ட கம்பிகளை அதற்கு பயன்படுத்தாமல் மீண்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் ஒரு அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி கம்பிகளை மட்டும் பொருத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 7 ஆண்டுகளாகியும் வீடு கட்டும் பணி தொடங்கப்படாதது குறித்து கேட்டபோது பதில் சொல்லாமல் அலைக்கழித்த சிதம்பரநாதன், சம்மந்தத்துக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மன உளைச்சல் அடைந்த சம்மந்தம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமுக்கு வந்தவர்,
இதை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து புகார் மனுவினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
