கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 55 வயது நிரம்பிய நபர் போக்சோ வழக்கில் கைது
புவனகிரி அருகே கீழமணக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள சரவணா நகரில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி அதே பகுதியில் வசிக்கும் தெய்வக்கண்ணு வயது 55 இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் சகோதரர் தெய்வகண்ணு வீட்டிற்கு விளையாட வந்திருந்தார்.
அப்பொழுது சிறுமி தனது சகோதரரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல தெய்வகண்ணு வீட்டிற்கு வந்த பொழுது தெய்வக்கண்ணு அந்தச் சிறுமிக்கு சாக்லேட் மற்றும் பழங்கள் கொடுத்து சிறுமியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் தெய்வக்கண்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரை போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர்