60 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து பணிமனைகளில் நடைபெற்று வந்த ஆயுதபூஜை விழாவை இந்த ஆண்டு நடத்தவிடாமல் தடுப்பதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு. பணிமனை முன்பு பி.எம்.எஸ் மற்றும் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 200 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை விழா, சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை கலாச்சார பண்பாட்டு விழாவாக பலரும் சாதி மத பேதமின்றி கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளாக போக்குவரத்து பணிமனைகளில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்பளத்தில் பணப்பிடித்தம் செய்து சாதி மத பேதமின்றி நடைபெற்ற பண்பாட்டு கலாச்சார விழாவான ஆயுத பூஜை விழாவை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த விடாமல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தடுப்பதாக கூறி பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ராணித்தோட்டம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் செவிசாய்க்காமல் இருந்தால் மக்கள் இயக்க போராட்டமாக மாறும் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















