மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தரமற்ற வீடு இடிந்து சஹானா என்ற சிறுமி பலியானதற்கு காரணமான அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி செட்டித்தோப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் காளி ஊராட்சி பொதுமக்கள் 100 ற்கும் மேற்பட்டோர் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மூன்றாவது கட்ட போராட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காளி ஊராட்சியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் அரசு வழங்கிய இலவச வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்திட உயர்மட்டக் குழுவினை அமைத்திட வேண்டும், ஊழல் முறைக்கேடுகள் தரமற்ற முறையில் வீடுகள் கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தரமற்ற வீடு இடிந்து சஹானா என்ற சிறுமி பலியானதற்கு காரணமான அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேட்டினை சீர்படுத்தி நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், காளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மனை இல்லாத அனைவருக்கும் மனை பட்டாசுடன் இடம் வழங்கி குடியிருப்பினை அமைத்து கொடுக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையினை உடனடியாக செயல்படுத்து தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேட்டி:- ஈழவளவன் – முன்னாள் மாவட்ட செயலாளர் – விசிக
