தவெக தலைவர் விஜயின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என விசிக எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. எனவே விஜய்க்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்றார்.
அதிமுக மற்றும் பாஜக தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
“ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியது போல பாஜக, அதிமுகவை கூட்டணியில் வைத்துக் கொண்டே கபளீகரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
செங்கோட்டையன் தனது இயல்பில் கட்சிக்காக போராடினால் அதை வாழ்த்த வேண்டியது தான். ஆனால் அவர் பாஜவின் இயக்கத்தில் செயல்படுகிறார் என்றால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல.
டில்லியில் அமித்ஷாவை சந்தித்தது, பாஜவின் பங்கு இருப்பதை உறுதி செய்கிறது.
இபிஎஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றோர் சந்தித்தது அதிமுகவின் நிலையைப் பற்றி பெரிய கேள்விகளை எழுப்புகிறது” எனக் கூறினார்.
மேலும், “அதிமுக பாஜவோடு கூட்டணி தொடர முடிவு செய்தால் அதற்கு அதிமுக தொண்டர்களே பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்” என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

















