உங்களின் நட்சத்திர ஆலங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். 9 கிரகங்களும் 3 நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன.
இன்று அந்த வரிசையில் நாம பார்க்க போற சித்திரை நட்சத்திரத்தின் கோயில் மதுரை மாவட்டம் குருவித்துறை அருகே சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவில் சித்திரை நட்சத்திரக்காரர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய கோவிலாக பிரதிபலிக்கிறது. குரு பகவனுக்காக, பெருமாள் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரை மாதத்தில், அழகிய சித்திர வேலைபாடுகளுடன் கூடிய ரதத்தில் காட்சி அளித்ததால் இங்குள்ள மூலவர் சித்திரரத வல்லபபெருமாள் என்ற பெயரில் தாயார்களுடன் சந்தனமர சிலையால் காட்சி தந்தருள்கிறார்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களின் இந்த பெருமாளை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது. ஜாதகத்தை கையில் வைத்து கொண்டு இந்த கோவிலை வலம் வந்து வேண்டினால் நிவர்த்தி ஆகிவிடும் என்பது ஐதீகம். இங்குள்ள குரு பகவான் யோக குருவாக அமர்ந்திருக்கிறார்.

குருவும், சக்கரத்தாழ்வாரும் சுயம்புவாக இருப்பது மேலும் சிறப்பிக்கும் வகையில் உள்ளது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். அவ்வகையில் சுயம்பு யோக குருவாக வீற்றிருக்கும் இவரை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியம் உடனே கிட்டும்.
முன்னொரு காலத்தில் நடந்த தேவாசுர போரில், ஏராளமான அசுரர்கள் மாண்டனர். அவர்களை, அசுர குரு சுக்கிராச்சாரியார் ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியின் மகன் கசனை அழைத்து, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா, என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்றான்.

அவனை அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஒரு தலையாகக் காதலித்தாள். அவள்எமூலமாக சுக்ராச்சாரியாரிடம் இருந்து கசன் மந்திரம் கற்றுக்
கொண்டான். இதையறிந்த அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து, அவனைக் கொன்று சாம்பலாக்கினர்.
அசுரகுரு அறியாமலேயே அவர் குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டனர்.
கசனைக் காணாத தேவயானி, தன் தந்தையிடம், கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திரு~;டியால் கசன் தன்
வயிற்றில் இருப்பதை அறிந்து, ம்ருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார்.

அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு கசன் வெளிவந்ததால், சுக்ராச்சாரியார் இறந்து விட்டார். தன்னைக் காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அவரை உயிர்பெறச் செய்தான்.
சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன், உங்கள் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயானி எனக்கு சகோதரி முறை வேண்டும், என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை ஏழு மலைகளால் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத பிரகஸ்பதி, மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார்.

பின்பு பிரகஸ்பதியின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே எழுந்தருளினார்.குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.
இங்குள்ள சித்திர ரத வல்லபபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசே~மான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.

சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்கள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.
இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் குரு பெயர்ச்சி மிகவும் விசே~மாக நடைபெறும். குரு தன் மகனுக்காக வைகையில் துறை அமைத்து தவமிருந்ததால் இந்த இடத்திற்கு குருவித்துறை என்ற பெயர் ஏற்பட்டது.

















