மயிலாடுதுறை மாவட்டத்தில் வானகிரி தரங்கம்பாடி மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம், நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாணகிரி, தரங்கம்பாடி, தொடுவாய், கூழையார், கொட்டாயமேடு, கீழமூவர்கரை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி ஒரு சில மீனவ கிராமங்கள் மீன் பிடித்து வருவதால் மீன் வளம் குறைந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீனவ கிராமங்களில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடல் இறங்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதே போல படகுகளிலும் மீனவர்கள் கருப்பு கொடி கட்டி நடுக்கடலில் நிறுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்
உடனடியாக தமிழக அரசு சுருக்கும்படி வலையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


















