ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீனாவுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு தரப்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றிருந்தார். அங்கு வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்று, டோக்கியோவில் 16 மாகாண ஆளுநர்களையும் சந்தித்தார். மேலும், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மோடி சீனாவின் தியான்ஜெனில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது சீன அதிபர் ஸி ஜின்பிங்கை நேரில் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட உள்ளார்.
7 ஆண்டுகள் கழித்து சீனப் பயணம்
பிரதமர் மோடி, 2019ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சென்றடைந்துள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின், இந்தப் பயணம் இரு நாடுகளின் உறவுகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

















