- சீன அதிபர் ஷீ ஜின்பிங், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய ரகசிய கடிதத்தால் இந்தியா – சீனா உறவு மேம்பட்டதுடன், புத்துயிர் பெறவும் முக்கிய காரணமாக அமைந்ததாக, ‘ப்ளும்பெர்க்’ ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
- ரஷ்ய அதிபர் புடின் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறார். சீனாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவிற்கான வருகை குறித்து விவாதிப்பார் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 1986ல் இருந்து தற்போது வரை 1 லட்சம் ஏக்கர் கோவில் சொத்துக்களை நாம் இழந்துள்ளோம். திருச்செந்தூரில் கோவிலுக்கு கொடுத்த 16 ஆயிரம் மாடு காணவில்லை, என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும், ஓடி வந்த ரயில்வே பெண் போலீஸ் திவ்யா, பிளாட்பார இடைவெளியில் கீழே விழுந்த அவரை, ரயில் நிற்கும் வரை, மேலே எழுந்திருக்காமல் அசையாமல் படுத்திருக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி படுத்திருந்த சுசீலாவை, ரயில் நின்றதும் பத்திரமாக மீட்டனர்.
- வலுவான மத்திய அரசும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டு இருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து , ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- பீஹார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்த ஆண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், சீனாவை 4:3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- நடப்பு 2025 2026 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை தாண்டி 7.6 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளை தாண்டி இந்த வளர்ச்சியை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
- டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 205 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
- வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.