திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என குறிப்பிடும் வகையில் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் நேரு கூறியதாவது :
“விஜயின் அரசியல் தரம் அவ்வளவு தான். ஒரு மாநில முதல்வர், மிகப்பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டுகளாக அரசியலில் அனுபவம் வாய்ந்தவர். நேற்று தான் அரசியலுக்கு வந்தவர், இப்படிப் பேசுவது மிகவும் தரம் தாழ்ந்த செயல். இதற்கு மக்கள் தேர்தலில் சரியான பதில் அளிப்பார்கள். நாங்களும் தேர்தல் அரங்கில் உரிய முறையில் பதிலளிப்போம்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது :
“10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதல்வரை எப்படிப் பேசினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தவறானது. அரசியல் விமர்சனங்களுக்கு ஒரு அளவு இருக்க வேண்டும். ஆனால் விஜய் அதை கடந்து செல்கிறார்,” என அமைச்சர் நேரு தெரிவித்தார்.