August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்!

by Divya
August 20, 2025
in News
A A
0
மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திருத்தணியில் நடைபெறவுள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

சமீபகாலமாக நூதனமான போராட்டங்களை நடத்தி வரும் சீமான், பனையேறும் தொழிலாளர்களுக்காக பனைமரத்தில் ஏறி “கள் மீதான தடையை நீக்க வேண்டும்” எனக் கோரியும், மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மாடுகளை மேய்த்தும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.

அதேபோல், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் “மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!” என்ற தலைப்பில் மரங்களின் மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான இடத்தை அவர் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது மரங்களை அணைத்து, முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவை வைரலாக பரவி வருகின்றன.trees

பின்னர் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:
“மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ்ந்து விடும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களும், எந்த உயிரினமும் வாழ முடியாது. உலக உயிர்களின் மூச்சு மரங்களே. இதையே நாம் ஆக்சிஜன் என்று சொல்கிறோம்.

பிள்ளைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். ஆனால் இந்த அரசு மரங்களை மண்ணில் வளர்க்காமல், பதாகைகளில் மற்றும் விளம்பரங்களில் மட்டுமே வளர்க்கிறது.

1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளிலும் 1.5 கோடி மரம் நாட்டியிருந்தால் இன்று எத்தனை கோடி மரங்கள் வளர்ந்திருக்கும். அதுபோலவே நடிகர்களும், ரசிகர்களிடம் ‘பிறந்த நாளில் மரம் நடுங்கள்’ என்றிருந்தால் எவ்வளவு பசுமை வளர்ந்திருக்கும்.

பருவநிலை மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். உண்மையில் பருவநிலையே மாறிவிட்டதா, அல்லது நீங்கள்தான் அதை மாற்றினீர்களா? வணங்குவதற்கு லட்சம் சாமிகள் இருக்கலாம். ஆனால் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமிதான் உள்ளது. வெயில் அடித்தால் குடை பிடிக்கிறோம். புவி வெப்பமடைதலைத் தடுக்க வேண்டுமானால் பச்சைக் குடை பிடிக்க வேண்டும். அதுதான் மரக் குடை.

வளர்ப்பதில் என்ன கஷ்டம்? நான் பத்தாண்டு பசுமைத் திட்டத்தையும், பல கோடி பனைத் திட்டத்தையும் அறிவித்து விடுகிறேன். ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத் தாருங்கள்; இந்த பூமியை பச்சை போர்வையால் போர்த்தி விடுவேன்,” என்றார் சீமான்.

Tags: ntkntk seemansave treesseemantrees manadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்

Next Post

புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் நம் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்: விஜய் கட்சி பற்றி பேசிய இபிஎஸ்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

July 26, 2026
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு – அரசை கண்டித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்

December 29, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.