திருப்பனந்தாள் காசி மடத்தின் 21 வது அதிபராக இருக்க கூடிய காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்கள் சிவலோக பதவி சேர்ந்தார் என்ற துயரமான ,வருத்தமான செய்தி கேட்டு துயருற்றோம்.தருமையா தினத்தின் முதன்மை சீடராக விளங்கியவர்கள் .குமரகுருபரர் வழியில் வந்த காசியில் தோன்றி பின்னர் தருமையாதினம் மகா சன்னிதானத்தின் உத்தரவின்படி திருப்பனந்தாளில் மடம் ஸ்தாபிக்கப்பட்டது. பழக்கவழக்கங்களிலும், சம்பிரதாயங்களிலும் குரு பக்தியிலும் சிறந்து விளங்கியவர். தம்முடைய (தருமபுரம் ஆதீனம்)துறவு பணிக்கு மகா சன்னிதானத்திடம் மேற்கொள்விடுத்தவர்.(கண்ணீர்).தம்மை தமிழ் எம்.ஏ எம்.பில் இளங்கலை முதுகலை பட்டம் படிக்க வைத்து அதே கல்லூரியில் பேராசிரியராகவும், திருமடத்தை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை வழங்கியவர். பன்னிரு திருமுறைகளை பல்லாயிரக்கணக்கான பதிப்புகளாக மிக குறைந்த விலையில் வெளியிட்டவர்.
பல நூல்களையும் வெளியிட்டவர். அறக்கட்டளை மடமாக காசிமடத்தை கூறுவார்கள்.காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை அத்தனை இடங்களிலும் காசிமடத்து அறக்கட்டளை இல்லாத இடமே கிடையாது.
பல அறக்கட்டளைகளை நிறுவியவர். சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட போது,முதுமையின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள இளவரசு சுவாமிகளை தீட்சை செய்ய வேண்டும் நியமனம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
திருமடங்கள் பல கோயில்களில் அன்னதானத்தை தொடர்ந்து செய்தவர்.தருமபுரம் 26வது சன்னிதானம் தான் இவரை ஆட்சிபடுத்தினார்.
சீர்காழி கட்டளையாக இருந்தவர் தான் அங்கிருந்து காசி மடத்துக்கு இளவரசு சுவாமியாக சென்றார்கள்.
தம்முடைய மணிவிழாவிற்கு திருப்பனந்தாள் ஆதீனம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்கள். அது பற்றி பேசிக் கொண்டிருப் போது தான் அவருடைய பரிபூரணம் அடைந்த செய்தி வந்தடைந்தது.
புதன்கிழமை மதியம் திருப்பனந்தாள் மடத்தில் சமாதி செய்யப்படுகிறது.
தருமையா தின திருக்கூட தம்பிரான் சாமிகள் அனைவரையும் அங்கு வேண்டி ஏற்பாடுகளை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.
அன்னாரின் ஆத்மா முக்தி பெற பிராத்திக்கின்றோம்.
ப சைவ உலவிற்கு மிகப்பெரிய இழப்பாக கும்.
சமய உலகில் அவர் ஆற்றிய பணிகள் நிலைத்து நிற்பதாக அமைந்துள்ளது.
அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தவர். எல்லாம் வல்ல சொக்கநாதர் திருவருளை சிந்திக்கின்றோம் என கூறினார்.


















