சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்த நீதிபதி சுரேந்தர் கூறியதாவது:
பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற சூழ்நிலை இல்லை. எனவே, தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க தடை விதிக்க தேவையில்லை.
சென்னை மாநகராட்சி அரசு கலந்து பேசி, பணியாளர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது.
இதனையடுத்து, சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

















