ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானை தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தருமபுரம் ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோயிலில் உள்ள யானை ஞானாம்பிகைக்கு யானைகள் தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கஜபூஜை நடத்தப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு, யானைக்கு ஆடை மற்றும் மாலை அணிவித்து, மகாதீப ஆராதனை காட்டி கஜ பூஜை சிறப்பு வழிபாடு நடத்தினார். இதில் ஆதின கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
















