மயிலாடுதுறை பெரியகோவில் என்று அழைக்கப்படும் புகழ்வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்திவிழா மற்றும்’ உலக யானைகள் தின கஜபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஶ்ரீ மகாகணபதி தனிசன்னதி உள்ளது. 9 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகராக ஸ்ரீ மகா கணபதி எழுந்தருளியுள்ளார். இங்கு சங்கடஹர சதுர்த்தி விழா மற்றும் உலக யானைகள் தின கஜபூஜைவிழா நடைபெற்றது. ஶ்ரீ மகா கணபதி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்த ஶ்ரீமகாகணபதி சன்னதி முன்பு யானை அபயாம்பிகைக்கு கஜபூஜை செய்து வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனம் பெயர்களில் சங்கல்பம் செய்யப்பட்டு யானைக்கு தீபாரதனை செய்யப்பட்டது. பொதுமக்கள் பழவகைகளை யானை அபயாம்பிகைக்கு தங்களின் கைகளால் வழங்கினர். நிறைவாக ஸ்ரீ மகா கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
















