மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நினைத்ததை முடிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 34 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் திருவாவடுதுறை காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் முன் செல்ல பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள் மேளவாதியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை கிராமவாசிகள் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்
