- மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வாயிலாக பல டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், கல்லணை கால்வாய் வழியாக கடைமடை ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத அவலம் நீடிக்கிறது.
- மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
- ‘கோவில் காவலாளி அஜித்குமாரை, மூர்க்கத்தனமாக தாக்கினால், மரணம் ஏற்படும் என, தெரிந்தே, அவரை தனிப்படை போலீசார் தாக்கி உள்ளனர்’ என, முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
- மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தாக்கலான வழக்கில், 2026 ஜனவரியில் முதற்கட்ட திட்டப் பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி முடிந்துள்ளது என மத்திய அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
- தமிழகத்தில் இன்று, 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் மிக கனமழைக்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ‘பிரச்னைகள் நடக்கும் இடங்களுக்கு, போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது’ என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும், 12ம் தேதி துவக்கி வைக்கிறார்.
- வரிவிதிப்பு காரணமாக இந்தியா – அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், முழு வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, மாற்று வழிகளில், ஏற்றுமதி வர்த்தக இழப்பை ஈடுகட்ட, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தயாராகி வருகின்றனர்.
- இந்திய கடற்கரையில் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா – 2025, பார்லி.,யில் நேற்று நிறைவேறியது.