விக்கிரவாண்டி அருகேயுள்ள அன்னியூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவிகள் 8 பேரும் பள்ளி வகுப்பறையில் இருந்தபோது வீட்டிலிருந்து சர்க்கரை கட்டி என நினைத்து பச்சை கற்பூரத்தை (நாப்தலின் உருண்டை) எடுத்து வந்த ஒரு மாணவியிடம் வாங்கி இடித்து சாப்பிட்டுள்ளனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு மாணவிகள் எட்டு பேருக்கும் வாய்ந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாணவிகள் எட்டு பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மருத்துவ மனைக்கு விரைந்து சென்று குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தபோது மாணவிகளுக்கு வாய்ந்தி மயக்கம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் வேறு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்தனர்.
