மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 69 வயது முதியவர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற மீனியலான 69 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிற்றிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். 69. இவரது மகன் காவலராக பணியில் உள்ளார். வயதான ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் (மீனியல் விசாரிப்பு) என்று சொல்லப்படும் கிராம உதவியாளரான ராமச்சந்திரன் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை அப்பகுதியில் உள்ள யாரும் இல்லாத கொள்ளை பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை எச்சரித்து அனுப்பியுள்ளார். பயந்து போன சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தை உறுதி செய்த போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளில் போக்சோ வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version