திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வரும் நிலையில் இருசக்கர வாகனத்தை திருடிய 65 வயது முதியவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (57). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்காக தன்னுடைய டிவிஎஸ் எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு இருசக்கர வாகனம் நிறுத்தத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு உள்ளே சென்றுள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் வெளியே வந்த மாதப்பன் தன்னுடைய டிவிஎஸ் எக்ஸ்எல் நிறுத்தி இருந்த இடத்தில் வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கும் இங்கும் தேடி பின்பு வாகனம் திருட்டுப் போனதை அறிந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தீவிர தேடலில் ஈடுபட்ட நகர போலீசார் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் மாயன் வட்டம் பகுதியில் வசிக்கும் 65 வயது மதிக்கத்தக்க விஜயன் என்கிற முதியவரை வாகனம் திருடியதற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவது வாடிக்கையாக இருந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் வாகன திருட்டில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
