தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்:-,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தகுடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு துவங்கியது. இன்றும், நாளையும் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ் விடுதலைக்கான தேசிய மேடை அகில இந்திய தலைவர் ராதாகிருஷ்ணன் எம்பி, பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் மாநில பொருளாளர் மோகனா, மாநில சிறப்பு தலைவர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன் மாநில செயலாளர் பழ. வாஞ்சிநாதன், சிபிஐஎம் மத்தியகுழு உறுப்பினர் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முழுமையாக, முறையாக அமலாக்கப்பட வேண்டும், சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும், மனிதக் கழிவை மனிதர் அகற்றும் இழிவுக்கு முடிவு கட்டும் வகையில் அத்தொழிலை முழுமையாக இயந்திர மயமாக்க சட்டம் நிறைவேற்றி துப்புரவு பொறியியலை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி-ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுக்க வலியுறுத்துவது, சாதி வாரிக் கணக்கெடுப்பை முழுமையான சமூகப் பொருளாதார ஆய்வுகளை உள்ளடக்கியதாக காலதாமதமின்றி விரைவில் நடத்தி முடித்து, பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் வாழ்நிலை இடைவெளிகளை நிரப்பிட வலியுறுத்துவது, தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமலாக்கம் கோரி, பொதுத் துறை தனியார்மயத்தை கைவிட வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேட்டி:-சம்பத் சிபிஐஎம் மத்தியகுழு உறுப்பினர்

















