40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்டகாலமாக உள்ள அனைத்து காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 40 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் வட்ட பொதுக்குழு கூட்டம் திருவள்ளூர் வட்ட தலைவர் ந.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் வட்டச் செயலாளர் YDS. மணி ஆண்டறிக்கை வட்ட பொருளாளர் ராசு ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் பா.உதயமலர்பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ரவி, மாநில பொது செயலாளர் பாரி, மாநில பொருளாளர் ஜேம்ஸ் கென்னடி மாநில துணை பொதுச்செயலாளர் சாசங்கன், மாநில அமைப்பு செயலாளர் முத்துராமன், உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர், JLF மாநில பொருளாளர் சாந்த குணாளன், விழா பேருரை தேசிய பொதுச்செயலாளர் காமராஜர், பவுண்டேஷன் ஆப் இந்தியா பேராசிரியர் ஜான் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதனை தொடர்ந்து இந்த வட்ட பொதுக்குழு கூட்டம் முக்கிய தீர்மானங்கள் ஏற்றப்பட்ட இதில் நீண்டகாலமாக உள்ள அனைத்து காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், நடைமுறையில் உள்ள CPS முறையை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த வேண்டும், 01-12-2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை பெற்றிட வேண்டும், விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் தீர்ப்பு பெறப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்கள் ஊர் மாற்றம் விண்ணப்பம் மூலம் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்திட வேண்டும், பிரிவு அலுவலகங்களுக்கு வாரிய பணிக்காக வழங்கப்படும் மின் தளவாட பொருட்கள் தரமற்றதாக உள்ளதால் விபத்து ஏற்படுகிறது ஆகவே தரமான தளவாடப் பொருட்கள் வழங்கிட வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்த போதிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக நிரப்பிட வேண்டும், வாரிய பணியின் போது இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய பணப்பயண்களும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்கும் கோப்புகளும் வீண் காலதாமதம் ஆவதை தடுத்திட வேண்டும், விடுபட்ட கேங்மேன்கள் பணி ஆணை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 40 தீர்மானங்களை அரசு நிறை வேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் ஜனார்த்தனன் மாநில துணைச் செயலாளர் லோகேஸ்வரன் மாநில இணை செயலாளர் மகாலிங்கம் நன்றியுரை மகேஷ் மற்றும் திருவள்ளூர், திருத்தணி, திருமழிசை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, தெற்கு, மேற்கு நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version