பெய்ஜிங்: திட்டமிட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டு இதுதான்! சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, தன்னுடைய படைப்பாற்றலும் திட்டமிடலும் ஒரே நாளில் ரூ.13,700 கோடி வருமானத்தை கொடுத்திருக்கிறது.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், எது எப்போது டிரெண்டாகும் என்பது யாராலும் கணிக்க முடியாத சூழல். ஆனால் அந்த வாய்ப்பைப் பறித்த இந்த இளைஞர், ஒவ்வொருவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.
லாபுபு – ஒரு பொம்மையின் வெற்றி கதை
சீன இளைஞர் வாங் நிங், தனது நிறுவனமான பாப் மார்ட் இன்டர்நேஷனல் வாயிலாக “லாபுபு” என்ற சிறிய பொம்மையை சந்தைக்கு கொண்டு வந்தார். 2015ல், ஹாங்காங்கை சேர்ந்த கலைஞர் கேசிங் லுங் தனது புத்தகத்துக்காக உருவாக்கிய கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்த பொம்மை உருவாக்கப்பட்டது.
முதன்முதலில் சீனாவில் அறிமுகமான இந்த லாபுபு பொம்மைகள், விற்பனைக்கு வந்ததும் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் விரைந்து வாங்கினர். சில இடங்களில் வன்முறைக்கே வழிவிட்ட அளவு இந்த ஹைப் அதிகமாக இருந்தது.
ஒரே நாளில் ₹13,700 கோடி வருமானம்!
இந்த வெற்றியின் சிகரமாக, வாங் நிங், ஒரே நாளில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,700 கோடி) சம்பாதித்தார். இதன் மூலம் பாப் மார்ட் நிறுவனத்தின் மதிப்பும் பல மடங்காக உயர்ந்தது.
அமெரிக்காவிலும் அதே பரபரப்பு
அதிக வர்த்தக பிரச்சனைகள் இருந்தபோதும், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் இந்த பொம்மைகள் அறிமுகமாகியதும், வரிசையில் காத்திருந்து வாங்கும் அளவுக்கு ஆர்வமுள்ளது. சீனாவைப் போலவே அமெரிக்காவிலும் லாபுபு ஹிட் ஆனது.
உழைப்பு + சிந்தனை = வெற்றி
வெறும் அதிர்ஷ்டம் அல்ல, பல ஆண்டுகளாக தொழில்துறையில் உழைத்த வாங் நிங், தனது திட்டமிட்ட முயற்சி, கூட்டணி மற்றும் சந்தை புரிதலால் இந்த வெற்றியை பெற்றுள்ளார். இது, “முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை” என்பதற்கான நவீன கால சான்றாகும்.